செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பு தேசிய முன்னணி வேட்பாளர்களை அறிவிக்கும்: ஜாஹித்
கோலாலம்பூர்:
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பு தேசிய முன்னணி வேட்பாளர்களை அறிவிக்கும்.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தேசிய முன்னணி விரைவில் இறுதி செய்யும்.
அதே வேளையில் வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
மேலும் சில பகுதிகளில் உள்ள சிக்கல்களை முன்கூட்டியே தீர்ப்பதற்கு அவகாசம் அளிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை பழைய, புதிய முகங்களின் கலவையைக் கொண்டிருக்கும்.
மேலும் வெற்றி பெறக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய, விரும்பத்தக்க வேட்பாளர்கள் கோட்பாட்டை தேசிய முன்னணி தொடர்ந்து கடைப்பிடிக்கும்.
அதுமட்டுமின்றி, ஜொகூரில் தலைமைத்துவத் திறனை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள பதவிகளில் இருப்பவர்கள், புதிய முகங்கள் இணைந்த ஒரு கூட்டணியை தேசிய முன்னணி முன்வைக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
