செய்திகள் மலேசியா
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் தேர்தல்: விகேகே ராஜசேகரன், பிரபாகரன் தலைமையிலான அணிகள் நேரடி போட்டி
கோலாலம்பூர்:
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் தேர்தலில் விகேகே ராஜசேகரன், பிரபாகரன் தலைமையிலான அணிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சபை நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த வர்த்தக சபையாக உள்ளது.
கிட்டத்தட்ட 98 ஆண்டுக்கால வரலாற்றை இந்த வர்த்தக சபை கொண்டுள்ளது.
இவ்வர்த்தக சபையில் ஆண்டு கூட்டமும் தேர்தலும் வரும் ஜூன் 14ஆம் தேதி பெட்டாலிங்ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறுகிறது.
நடப்பு தலைவர் நிவாஸ் இராகவன் இரண்டு தவணைகள் தலைவராக இருந்ததால் அவர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது.
இதனால் வரும் தேர்தலில் விகேகே இராஜசேகரன், பிரபாகரன் வைத்தியலிங்கம் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
மேலும் விகேகே ராஜசேகரன் அணியில்
துணை தலைவர் பதவிக்கு
பன்னீர் செல்வம், உதவித் தலைவர் பதவிக்கு டாக்டர் சித்ரா, பொருளாளர் பதவிக்கு ஐஆர் பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நிர்வாக உறுப்பினர்கள் பதவிக்கு டாக்டர் செல்வராஜூ, டாக்டர் இராஜசேகரன், டத்தோ கணேஷ், பிரவின் டத்தோ தமிழ்ச்செல்வம், குட்டி கிருஷ்ணன் மாதவன், டோனி கிளிபெர்ட்,
ஷாமில், டாக்டர் நெடுஞ்செழியன் வேங்கு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதே வேளையில் பிரபாகரன் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு மோகனா சின்னத்தம்பி, உதவித் தலைவர் பதவிக்கு கவிமாறன், பொருளாளர் பதவிக்கு சண்முக செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நிர்வாக உறுப்பினர்கள் பதவிக்கு இரா பெருமாள், ராம்குமார் ஜெயா மாணிக்கம்,
சந்திரா , வினோதன், குளோரி, வர்மன்,
பிரபாகரன் த/பெ கோவிந்தன்,பாவல், டத்தோ சந்திரசேகரன், குமரகுரு, டாக்டர் புவனேஸ், ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இம்முறை தேர்தலில் 422 உறுப்பினர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 2:13 pm
குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
June 4, 2026, 12:53 pm
ஜொகூர் தேர்தலில் மடானி இல்லை; அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும்: ஜாஹித்
June 4, 2026, 12:52 pm
10 ஆண்டு மலேசிய கடப்பிதழுக்கான கட்டணம் 350 ரிங்கிட்
June 4, 2026, 12:51 pm
கடந்த 12 மணி நேரத்திற்குள் சபா, சரவாக்கில் 2 பலவீனமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன
June 4, 2026, 12:51 pm
11 மாத குழந்தையைக் கொன்றதாக இரண்டு குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டது
June 4, 2026, 12:50 pm
