செய்திகள் மலேசியா
"ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகர் இருக்க வேண்டும்": கல்வி அமைச்சர் ஃபத்லினா வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
"ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மருத்துவர் அல்லது வழக்கறிஞர் இருக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், இனி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகர் உருவாக வேண்டும்" என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நூலகவியல், மொழிபெயர்ப்பு, செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் வாசிப்புப் பழக்கமே எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாசிப்பு பண்பாட்டை வலுப்படுத்த தரமான புத்தகங்களுக்கான அணுகல், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஆதரிக்கும் அறிவுச் சூழல் ஆகிய இரண்டும் அவசியம் என அவர் தெரிவித்தார்.
மேலும், பள்ளி, உயர்கல்வி மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 100 ரிங்கிட் புத்தக வவுச்சர் திட்டம், பொருளாதாரச் சவால்கள் நிலவும் காலத்திலும் மாணவர்கள் தரமான புத்தகங்களைப் பெற உதவும் முக்கிய முயற்சியாகும் என்றும் கூறினார்.
பள்ளி நூலகங்கள், கல்வி வள மையங்கள், பல்வேறு வாசிப்பு ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க கல்வி அமைச்சு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"வாசிக்கும் குடும்பம் தான் சிந்திக்கும் குடும்பம்; சிந்திக்கும் குடும்பம்தான் அறிவார்ந்த தேசத்தை உருவாக்கும்" என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திலும் வாசிப்பை நேசிக்கும் ஒரு "நூலகர்" உருவாக வேண்டும் என ஃபத்லினா குறிப்பிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
