நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10வது மாடியில் இருந்து பிறந்த குழந்தையை வீசிய வழக்கு: நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளம் தாய்

ஜொகூர் பாரு: 

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய குழந்தை மரண வழக்கில், 22 வயதான இளம் தாய் ஒருவர் தனது புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் மரணத்துக்குக் காரணமான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

நுரான் பத்ரிஸ்யா ஜமாலுடின் என்ற அந்தப் பெண், ஜொகூர் பாரு செக்ஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முஹம்மத் ஜாமிர் சுஹைமி முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த மே 20ஆம் தேதி, ஸ்கூடாயில் உள்ள மக்கள் வீட்டு வசதி (PPR) குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து வீசப்பட்டதாக நம்பப்படும் பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 304(a)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, பிரேதப் பரிசோதனை அறிக்கை உட்பட தொடர்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில், நீதிமன்றம் ஜூலை 3ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், உயிரிழந்த குழந்தைக்கு இரட்டைக் குழந்தை ஒன்று இருப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 20,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset