செய்திகள் இந்தியா
டெல்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி:
டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று (ஜூன் 3) காலை 9.40 மணியளவில் - மலேசிய நேரம் பிற்பகல் 12.05 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதில், காயமடைந்த 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
தீயை அணைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
காவல்துறையின் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
