செய்திகள் மலேசியா
2027 பட்ஜெட் சிக்கன நடவடிக்கைகளில் கல்வித் திட்டங்களுக்குப் பாதிப்பு இல்லை: ஃபட்லினா உறுதி
கோலாலம்பூர்:
2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், புதிய ஆசிரியர்களின் நியமனம், கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானம், பழுதடைந்த பள்ளிகள் சீரமைப்பு, மாணவர்களுக்கான ஊட்டச்சத்து உணவுத் திட்டம் (RMT) ஆகியவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் உறுதியளித்துள்ளார்.
அமைச்சின் முக்கிய முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2027ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம், ஆறு வயது மாணவர்களின் முதலாம் ஆண்டு சேர்க்கை நடைமுறைகளும் வழக்கம்போல தொடரும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள், புவிசார் அரசியல் பதற்றங்களின் தாக்கத்தால், அரசாங்கச் செலவினங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் முன்பே சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை, இடைநிலைப் பள்ளி மாணவர்கள், அரசுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 100 ரிங்கிட் புத்தக வவுச்சர்கள், பள்ளி மீண்டும் தொடங்கியவுடன் விநியோகிக்கப்படும் என்றும் ஃபத்லினா அறிவித்தார்.
"சிக்கனம் அமல்படுத்தப்பட்டாலும் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படாது" என்ற உறுதியுடன் கல்வி அமைச்சு தனது முக்கிய திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
