செய்திகள் மலேசியா
பாலர்ப்பள்ளி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை வலுப்படுத்த 10 மில்லியன் ஒதுக்கீடு: கல்வி அமைச்சர்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர்ப்பள்ளிகளுக்கும் தரமான வாசிப்புப் பொருட்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. சிறுவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வத்தையும் ஆயுள் முழுவதும் கற்றல் மனப்பாங்கையும் உருவாக்கும் நோக்கில் இந்த முக்கிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க, குழந்தைகளிடையே வாசிப்புப் பண்பாட்டை ஆரம்பக் கல்வி நிலையிலேயே விதைப்பது அவசியம் என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் வலியுறுத்தியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய பாலர்ப்பள்ளி பாடத்திட்டத்தில் ‘Baca Bersama’ (ஒன்றாக வாசிப்போம்) என்ற சிறப்புப் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, ‘PAKAT’ திட்டத்தின் மூலம் பெற்றோர்கள், பள்ளிகள், சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், நாடு முழுவதும் உள்ள 10,515பாலர்ப்பள்ளி வகுப்புகளுக்குக் கூடுதல் வாசிப்புப் பொருட்கள் வழங்க 10.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைச்சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் நூலகங்கள், மொழிபெயர்ப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது என்றும், உள்ளூர் மொழி, பண்பாட்டை மையமாகக் கொண்ட அறிவு சூழலை மேலும் வலுப்படுத்த கல்வி அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக ஃபத்லினா தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
