செய்திகள் உலகம்
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
ஜெனிவா:
ஐக்கிய நாடுகள் அவையின் புதிய தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் 81 ஆவது அவையின் தலைவருக்கான தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், தலைவர் பதவிக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான், சிப்ரஸ் நாட்டின் சிறப்பு பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற அவைக்குத் தலைமை வகிப்பதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 190 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில், பெரும்பான்மைக்கு 96 வாக்குகள் பெற வேண்டியது கட்டாயமாகும்.
இந்தத் தேர்தலில், ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் 91 வாக்குகள் பெற்ற நிலையில், வங்கதேசத்தின் கலீலுர் ரஹ்மான் 99 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். இதன்மூலம், வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் ஐ.நா.வின் 81 ஆவது அவைக்கு கலீலுர் ரஹ்மான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 5:22 pm
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து
July 28, 2026, 11:39 am
அமெரிக்காவின் சியெட்டலில் துப்பாக்கி சூடு சம்பவம்: 15 வயது இளைஞரைக் கைது செய்தது போலிஸ்
July 27, 2026, 11:18 am
தென்கொரியாவில் நடந்த சண்டையில் மலேசிய நாட்டவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்
July 27, 2026, 11:17 am
கழிவறை கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சோடா பானத்தை விரைந்து குடிக்கும் போட்டி: பொதுமக்கள் கண்டனம்
July 26, 2026, 4:44 pm
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
