செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் துவாங்கு முஹ்ரிஸை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேல் சந்தித்தார்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுதின் ஹாருன், நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசாரைச் சந்திக்க சிரம்பானில் உள்ள இஸ்தானா ஹிங்காப்பில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் செலவிட்டார்.
டத்தோஸ்ரீ அமினுடின் காலை 9.05 மணிக்கு அரண்மனைக்கு வந்து 10.47 மணிக்கு புறப்பட்டார்.
அவரது வருகையைப் பற்றி கேட்டபோது அவர் செய்தியாளர்களிடம் இது சாதாரண புதன்கிழமை என்று கூறினார்.
நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி தலைவருடன் நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் அல்சாஃப்னி அஹ்மத் உடன் இருந்தார்.
ஒவ்வொரு புதன்கிழமையும் விஸ்மா நெகேரியில் நடைபெறும் மாநில ஆட்சிக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு முன்பு, துவாங்கு முஹ்ரிஸைச் சந்திப்பது அமினுடினின் வழக்கம்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 4:17 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வவாசான் கட்சி போட்டியிடாது: ஹம்சா
June 25, 2026, 2:45 pm
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டாக்சிக்கு $15 கட்டணம் உயர்த்தப்படுகிறது
June 25, 2026, 2:10 pm
பள்ளத்தில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: லஹாட் டத்து மக்களிடையே பரபரப்பு
June 25, 2026, 12:37 pm
