நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

TNB டிரான்ஸ்ஃபார்மர் உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து

கோலாலம்பூர்:

இன்று அதிகாலையில் செமென்யேவின் சுங்கை புருன் தொழிற்சாலை பகுதியில், டிரான்ஸ்ஃபார்மர்கள், தேசிய எரிசக்தி நிறுவனத்தின் (TNB) உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.

சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், அதிகாலை 4.29 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகவும், அதற்குப் பின்னர் செமென்யே தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தீயானது, சுமார் 18.6×9.3 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு தொழிற்சாலையை உள்ளடக்கியதாகவும், தீயணைப்புப் படை சம்பவ இடத்தை வந்தடைந்தபோது, தீ மூண்டு எரிந்து கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

"அப்போது, தீயின் மதிப்பிடப்பட்ட சதவீதம் 40 சதவீதமாக இருந்தது, மேலும் தீ மூண்டு எரிந்து கொண்டிருந்தது.

"உறுப்பினர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்ததும், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன" என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாங்கி, காஜாங்கைச் சேர்ந்த தீயணைப்பு, மீட்பு துறை உறுப்பினர்களும் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் உதவியதாக அவர் கூறினார்.

"இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, தீ 90 சதவீதம் அணைக்கப்பட்டது. எஞ்சிய தீயை அணைக்கும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன" என்றார் அவர்.

அந்தச் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset