நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்; அம்னோ- நம்பிக்கை கூட்டணி இடையே கருத்து வேறுபாடு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது அரசியல் தந்திரங்கள்: முக்ரிஸ்

கோலாலம்பூர்:

அம்னோ- நம்பிக்கை கூட்டணி இடையே கருத்து வேறுபாடு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது அரசியல் தந்திரங்கள் ஆகும்.

பெஜூவாங் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் இதனை கூறினார்.

ஜொகூர் மாநில சட்டமன்றம் நேற்று கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அம்னோ, நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே அரசியல் உடன்பாடு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் ஒரு அரசியல் தந்திரமாக எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.

மாறாக, மாநிலத் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளும் மீண்டும் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல அம்னோ, ஜசெக ஆதரவாளர்கள் இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் இன்னும் சங்கடமாக உணரப்படுகிறது.

இருந்தாலும் அம்னோ, ஜசெக போட்டியிடும் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பது, அவற்றின் அரசியல் உறவு இன்னும் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset