நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையிலான  பிளவு கவலையளிக்கிறது: அஹ்மத் பைசால்

கோலாலம்பூர்: 

பெர்சத்து கட்சிக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே பிளவுக்கான விதைகள் முளைப்பது கவலையளிக்கிறது.

பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் பைசால் அஸுமு இதனை கூறினார்.

பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் பாட்லி ஷாரியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், 
பாஸ் கட்சி தனித்துச் செயல்பட விரும்பினால் தனது கட்சியால் எதுவும் செய்ய முடியாது.

அதுதான் பாஸ் கட்சியின் விருப்பம் (தனித்துச் செயல்படுவது), எங்களால் எதுவும் செய்ய முடியாது. 

பாஸ் கட்சியின் பார்வையில் அது மலாய் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றால், அதைச் செய்யுங்கள் என நான் உங்களை அறிவுறுத்துகிறேன்.

தேசியக் கூட்டணி பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதே என் கருத்து.

தேசியக் கூட்டணி பிளவுபட்டால் அது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset