நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாராங்கத்தியுடன் வந்த இருவரால் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்: போலிஸ் 

பாலிங்:

பாராங்கத்தியுடம் வந்த இருவரால் கொள்ளையடிக்கப்பட்டதில், ஒருவர் தலை, தோள்பட்டை, முழங்கையில் காயமடைந்தார்.

இந்த சம்பவம் இன்று காலை இங்குள்ள கோல கெட்டில் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்தது.

ஆயுதங்களுடன் கூடிய கும்பல் கொள்ளை சம்பவம் தொடர்பாக காலை 8.40 மணிக்கு தமக்கு தகவல் கிடைத்ததாக பாலிங் மாவட்ட போலிஸ் தலைவர் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ தெரிவித்தார்.

போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்டவர் 20 வயதுகளில் உள்ள உள்ளூர் இளைஞர் என்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

காலை 8.10 மணியளவில், வெள்ளி நிற ஹோண்டா காரில் வந்த, சந்தேக நபர்களான இரண்டு நபர்கள் பாதிக்கப்பட்டவரை அணுகியதாக விசாரணையில் தெரியவந்தது.

சந்தேக நபர்கள் இருவரும் பாராங்கத்தி ஆயுதம் ஏந்தி, பாதிக்கப்பட்டவரைக் கொள்ளையடித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருக்குத் தலை, தோள்பட்டை, முழங்கையில் காயங்கள் ஏற்பட்டன. 

அவர் சிகிச்சைக்காக சுங்கைபட்டானியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டார் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset