நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உடன்பிறந்த இருவர் பந்தயத்தில் காரை அதிவேகமாக ஓடியதால்,  ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்: போலிஸ்

குளுவாங்:

உடன்பிறந்த இருவர் பந்தயத்தில் காரை அதிவேகமாக ஓடியதால், ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

குளுவாங் மாவட்ட போலிஸ் தலைவர் பஹ்ரின் முகமது நோ இதனை கூறினார்.

நேற்று இங்குள்ள ரெங்காம் - சிம்பாங் ரெங்காம் சாலையின் 27ஆவது கிலோமீட்டரில் கோர விபத்து நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில், பந்தயத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு சொகுசு கார்கள் மேலும் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தை ஏற்படுத்தின.

இதில் ஒரு தம்பதியினர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

பிற்பகல் 1.19 மணிக்கு நடந்த இந்த சம்பவத்திற்கு முன்பு, ஒரு பிஎம்டபள்யூ 530இ கார், உடன்பிறந்தவர்கள் ஓட்டிவந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ250 காருடன் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தது.
அந்த இரண்டு கார்களைத் தவிர, பெரோடுவா அல்சா, டொயோட்டா வியோஸ், புரோட்டான் வீரா, மற்றொரு மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய மேலும் நான்கு வாகனங்களும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​பிஎம்டபிள்யூ 530இ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி, இறுதியில் நான்கு வாகனங்கள் மீதும் மோதியது.

பிஎம்டபிள்யூ 530இ கார் சறுக்கி, சாலையின் குறுக்கே இருந்த ஒரு பள்ளத்தில் விழுந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தின் விளைவாக, டொயோட்டா வியோஸ் காரில் பயணித்த 36 வயதான முகமது ஐமான் முகமது ரஷீத், 33 வயதான நார் அஸ்லினா அப்துல் லத்தீஃப், 75 வயதான செமெக் மாட் சோ, 10 வயதான நூர் ஐரிஷ் சிஃபா சைடெக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரு கார் ஓட்டுநர்களையும் போலிசார் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset