செய்திகள் மலேசியா
BREAKING NEWS: நம்பிக்கை கூட்டணி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்படலாமா?
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்ற யூகங்களும் பரபரப்புகளும் மேலும் வலுவாகியுள்ளது.
இது தொடர்பாகக் கருதப்படும் ஒரு கூட்டத்தில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்களும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை இங்குள்ள மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுதீன் ஹரூனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒரு சந்திப்பை நடத்தினர்.
மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான ஒரு சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இவர்கள் காலை 9.30 மணிக்கெல்லாம் அமினுதீனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வரத் தொடங்கியதாகத் தெரிகிறது.
இருப்பினும் மந்திரி புசாரின் பத்திரிகைச் செயலாளர் அஹ்மத் ஷாஹிர் முஹம்மது ஷா, கூட்டத்தைத் தொடர்ந்து எந்தப் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
இன்று காலை வரை, செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை.
நாளை மந்திரி புசார், யாங் டிபெர்டுவான் பெசார் நெகிரி செம்பிலான், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் சந்திப்பார்,
மேலும் வாராந்திர சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டங்களை நடத்துவதற்கு முன் ஒரு அமர்வு வழக்கமாக நடக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2026, 2:11 pm
காரணமே இன்றி கணவன்-மனைவி மீது கண்ணீர்ப்புகை திரவம் தெளித்த நபர் கைது
June 2, 2026, 2:02 pm
புந்தோங் மின் சுடலையில் ஒய்வு கொட்டகை புதுப்பிக்கப்பட்டது: வின்சண்ட் டேவிட்
June 2, 2026, 12:54 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தை உடனடியாகக் கலைக்க முடியாது: முஹம்மது காலித்
June 2, 2026, 12:32 pm
பாராங்கத்தியுடன் வந்த இருவரால் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்: போலிஸ்
June 2, 2026, 12:24 pm
பெர்சத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையிலான பிளவு கவலையளிக்கிறது: அஹ்மத் பைசால்
June 2, 2026, 11:44 am
TNB டிரான்ஸ்ஃபார்மர் உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து
June 2, 2026, 10:54 am
