செய்திகள் கலைகள்
AI பயன்படுத்திப் படம் தயாரித்தவருக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு: அமெரிக்க செல்ல மறுத்த படைப்பாளி
குவாங்சு:
சீனாவில் ஆடவர் ஒருவர் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தை வைத்துக் குறும்படம் ஒன்றை தயாரித்தார்.
10 நாள்கள் கடும் உழைப்பு, 3,000 யுவான் செலவில் அதனை தயாரித்து முடித்தார்.
இப்போது ஹாலிவுட்டில் வேலை செய்ய அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
29 வயது கலைஞர் லியு ஸியு (Liu Ziyu) கடந்த மாதத் தொடக்கதில் குறும்படத்தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.
மறுநாளே பிரபல AI திரைப்படத் தயாரிப்பாளர் பிஜே ஆச்சூட்டுரோ (PJ Accetturo) அதைக் கண்டுள்ளார்.
"நான் பார்த்த சிறந்த குறும்படங்களில் ஒன்று இது," என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
லியுவை தமது நிறுவனத்தில் வேலையில் சேர்க்க விரும்புவதாகவும் அவரைக் கண்டுபிடிக்கச் சிரமப்படுவதாகவும் கூறினார்.
அவ்வளவுதான் லியுவின் 'Zombie Scavenger' குறும்படம் பிரபலமானது.
இணையவாசிகளும் பிஜே ஆச்சூட்டுரோவின் விருப்பத்தை லியுவிடம் கூறினர்.
அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி வாய்ப்பை மறுத்துவிட்டார்.
3 நிமிடக் குறும்படம் பொம்மைக்கும் இயந்திர மனிதக் கருவிக்கும் இடையிலான காதல் கதையைச் சொல்கிறது அவரது படைப்பு.
அது இதுவரை 60 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளனர்.
ஆதாரம்: South China Morning Post
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:52 am
ஓணம் ஓட்டத்தில் பிருத்விராஜின் கலிஃபாவை முந்திய நிவின் பாலியின் பெத்லகேம்
August 22, 2026, 4:18 pm
‘மோசமான’ திரைப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு
August 21, 2026, 5:34 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
August 19, 2026, 3:00 pm
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் மோசமான வசூல்: ரசிகர்கள் ஏமாற்றம்
August 19, 2026, 2:38 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள்: ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது
August 18, 2026, 12:49 pm
நடிகை அனன்யா ராஜ் காலமானார்
August 17, 2026, 7:24 pm
ஜன நாயகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாகிறது
August 17, 2026, 12:20 pm
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
