செய்திகள் இந்தியா
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்; கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் வரும் 6ஆம் தேதி இந்தியா வருகை
நியூயார்க்:
தேர்வு தொடர்பான குளறுபடிகள் காரணமாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி அமைதி போராட்டம் நடத்த, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே வரும் 6ம் தேதி டெல்லி வருவதாக அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சித்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற குழு சமூக ஊடகத்தில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. மில்லியன் கணக்கானோர் அதில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பு சட்டத்தின் வழிநின்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அமைதியான முறையில் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.
வரும் ஜூன் 6ம் தேதி டெல்லி வருகிறேன். தயவுசெய்து நீங்கள் விமான நிலையத்தில் என்னுடன் இணையுங்கள். அங்கிருந்து நாம் அனைவரும் ஒன்றாக சென்று, ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டம் நடத்துவதற்கான அனுமதியை பெற பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு செல்வோம்.
‘‘டெல்லி வந்தால் என்னை கைது செய்து விடுவார்கள் என எனது குடும்பத்தினரும், நண்பர்களும் அச்சப்படுகின்றனர். ஆனால், நமது நாடு இன்றும் ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. அமைதியாகப் போராடுவதற்கான அனுமதி நமக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என கூறி உள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
