செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ ஏரோ ரயில் சேவை ஜூன் 1 முதல் 24 மணி நேரமும் மீண்டும் செயல்படும்: அந்தோனி லோக்
புத்ராஜெயா:
கேஎல்ஐஏ ஏரோ ரயில் சேவை ஜூன் 1 முதல் 24 மணி நேரமும் மீண்டும் செயல்படும்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
கேஎல்ஐஏ ஏரோ ரயிலின் விரிவான செயல் திட்டம் நிறைவடைந்தது.
இதைய் தொடர்ந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1-இல் உள்ள ஏரோ ரயிலின் சேவை, இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேரமும் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
நவம்பர் 2025 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், நிலப் பொதுப் போக்குவரத்து துறை (அபாட்) ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஒரு சுதந்திரமான ரயில் மதிப்பீட்டாளரால் இது சரிபார்க்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஆய்வு, பழுதுபார்க்கும் பணிகள், அமைப்பு சோதனை, சரிபார்ப்பு, சோதனை இயக்கங்கள் என மூன்று கட்டமைக்கப்பட்ட நிலைகளை இது கொண்டுள்ளது.
பயணிகள், பயணிகள் அல்லாத சூழ்நிலைகளில் 24 மணிநேரம் மற்றும் 48 மணிநேரத்திற்கு நீடித்த சோதனைகள் நடத்தப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
