செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் மேம்பாட்டில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும்: ரவீன்குமார்
சிகாமட்:
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் மேம்பாட்டில்
மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும்.
ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன்குமார் கிருஷ்ணசாமி இதனை கூறினார்.
ஜொகூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஜொஹாரி பின் சரிப் இதில் கலந்து கொண்டார்.
சிகாமட்டில் உள்ள பத்து அன்னம், போர்ட்ரோஸ் தோட்டம், கோமாளி தோட்டம் ஆகிய தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசின் நிதி வழங்கப்பட்டது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நலன், கல்வி மேம்பாட்டு அம்சங்களுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதில் ஜொகூர் மாநில அரசு காட்டிவரும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்காக, ஜொகூரின் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸிக்கு எனது உயரிய பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மூன்று பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது, இனம், மதம் பின்னணி பேதமின்றி மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதில் ஜொகூர் மாநில அரசு காட்டும் அக்கறையை நிரூபிக்கிறது.
இந்த முன்னெடுப்பு, ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், கல்வியை நிலைநிறுத்துவதிலும், மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் எந்தவொரு சமூகமும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளி ஊழியர்களின் வசதி மற்றும் எதிர்காலத்திற்காக, ஒதுக்கப்படும் ஒவ்வொரு நிதியையும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், உள்ளூர் பள்ளி நிர்வாகம், பள்ளி நிர்வாகம் அதன் முழுத் திறனுடன் பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 5:25 pm
கேஎல்ஐஏ ஏரோ ரயில் சேவை ஜூன் 1 முதல் 24 மணி நேரமும் மீண்டும் செயல்படும்: அந்தோனி லோக்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
