நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திற்காக வாயால் மட்டும் பேசாமல் செயல்படும் ஒரே கூட்டணி தேசிய முன்னணி: அர்விந்த் அப்பளசாமி

பாகான் டத்தோ:

இந்திய சமுதாயத்திற்காக வாயால் மட்டும் பேசாமல் செயல்படும் ஒரே கூட்டணி தேசிய முன்னணி தான்.

இதை யாராலும் மறுக்க முடியாது என்று பாகான் டத்தோ மஇகா இளைஞர் பிரிவுத் தலைவத்  அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் குடும்ப தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

அவ்வகையில் பாகான் டத்தோ மஇகாவின் குடும்ப தின விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 1,500க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர்.

பாகான் டத்தோவை பொறுத்த வரையில் தேசிய முன்னணிக்கும் மஇகாவுக்கும் மக்கள் தொடர்ந்து முழு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இதனால் தான் நாம் செய்யும் நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் வற்றாத ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் அவ்வகையில் பாகான் டத்தோ மஇகாவின் குடும்ப தின விழா வெற்றி விழாவாக அமைந்துள்ளது என்று அர்விந்த் கூறினார்.

தேசிய முன்னணிக்கும் மஇகாவுக்கும் இடையே நல்லதொரு உறவு உள்ளது.

குறிப்பாக தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடிக்கும் மஇகாவின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் ஒற்றுமையாக தான் உள்ளனர்.

ஆக தேசிய முன்னணி, மஇகா இடையிலான உறவும் ஒத்துழைப்பும் தொடரும் என தாம் நம்புவதாக அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

தேசிய முன்னணியை பொறுத்தவரையில் இந்திய சமுதாயத்திற்காக வாயால் மட்டும் பேசாது.

அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் கூட்டணியாக தேசிய முன்னணி விளங்கியது.

இதற்கு உதாரணம் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் இடங்கள் ஆகும்.

ஆக மக்கள் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset