நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் குடும்ப தின விழா நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது; சுங்கை சிப்புட் மக்களுக்கு நல்லதொரு விடிவுக்காலம் பிறக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சுங்கை சிப்புட்:

சுங்கை சிப்புட்டில் வாழும் மக்களுக்கு விரைவில் நல்லதொரு விடிவுக்காலம் பிறக்க வேண்டும்.

இதுவே எனது பிரார்த்தனையாக உள்ளது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.

இவ்வாண்டு மஇகா தனது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.

இந்த 80ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் சிறப்பு பிரார்த்தனைகளுடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து இன்று மஇகாவின் குடும்ப தின விழா நாடு முழுவதும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இக்குடும்ப தின விழா என்பது மஇகா உறுப்பினர்களை ஒன்றுபடுத்துவது அல்ல.

மாறாக இந்திய சமுதாயத்தை ஒன்றுப்படுத்த வேண்டும் என்பது மஇகாவின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
பதவி, பட்டங்கள் இல்லையென்றாலும் மஇகா தொடர்ந்து இந்திய சமூகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும், போராடும் ஒரே கட்சி மஇகா தான். இதை யாராலும் மறுக்க முடியாது.

கடந்த காலங்களில் இந்திய சமுதாயம் மஇகாவை நம்பவில்லை. இதனால் பலரை நம்பி அதனால் ஏற்பட்ட விளைவுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதனால் மக்கள் மீண்டும் மஇகாவை தேடுவதுடன் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு உரிய சேவையை மஇகா வழங்கி வருகிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

சுங்கை சிப்புட்டை பொருத்த வரையில் கடந்த தேர்தலில் நான் இத்தொகுதியில் தோல்வி கண்டேன்.

வெற்றியோ தோல்வியோ தொகுதி மக்களுக்கு உரிய சேவையை வழங்க வேண்டும் என்பதே எனது இலக்காகும்.

அவ்வகையில் சுங்கை சிப்புட் மக்களுக்கு விரைவில் நல்லதொரு விடிவுக் காலம் பிறக்கும்.

இது தான் எனது பிரார்த்தனை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset