நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

11ஏ பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷனில் இடம் கிடைக்கவில்லையா?: குணராஜ் மறுப்பு

கிள்ளான்:

எஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற மாணவர் ஒருவருக்கு மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் கிடைக்கவில்லை என்ற கூற்றுகளை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் மறுத்துள்ளார்.

பெட்ரோனாஸ் கல்வி உதவித் தொகையைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், கேள்விக்குட்பட்ட அந்த மாணவருக்கு சிலாங்கூர் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் தனது படிப்பைத் தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வில் 11ஏ மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவருக்கு அரசு நிறுவனத்தில் தனது படிப்பைத் தொடர வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கூற்று தொடர்பாக டிக்டாக் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது குறித்து நான் அறிந்திருக்கிறேன்.

இதை சரிபார்த்ததில், அந்த மாணவர் உண்மையில் சிலாங்கூர் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர ஒரு வாய்ப்பைப் பெற்றிருந்தார்.

கூடுதலாக, அவர் பெட்ரோனாஸிடமிருந்து ஒரு கல்வி உதவித்தொகை வாய்ப்பையும் பெற்றிருந்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

முன்னதாக, கனியமுதன் பதிவேற்றிய ஒரு காணொளி கவனத்தை ஈர்த்தது.

அதில் எஸ்பிஎம் தேர்வில் 11ஏ மதிப்பெண்களைப் பெற்றிருந்தபோதிலும், தனது மகள் தென்மலருக்கு மெட்ரிகுலேஷன் படிப்பில் இடம் கிடைக்கவில்லை.

அதற்குப் பதிலாக ஒரு பாலிடெக்னிக்கில் சேர்வதற்கான வாய்ப்பு மட்டுமே கிடைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அதே காணொளியில், ஆவணங்கள் மற்றும் படிவங்களை நிரப்புவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகத் தனது மகளின் விண்ணப்பம் தாமதமானதாகவும் அவர் விளக்கினார்.

என் மகள் எஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்று, பெட்ரோனாஸ் கல்வி உதவித்தொகையையும் பெற்றாள், ஆனால் அவள் சமர்ப்பித்த படிவத்தில் ஒரு சிக்கல் இருப்பதாக அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset