நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“புதிய தலைமுறை போதைப்பொருட்களுக்கு எதிராக ஏ.ஏ.டி.கே அதிரடி நடவடிக்கை": ஃபென்டானைல் கண்டறியும் சிறப்பு சோதனை உபரணங்கள் ஜூனில் அமலாக்கம்

செப்பாங்:

மலேசியாவில் புதிய தலைமுறை செயற்கை போதைப்பொருட்களின் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் (ஏ.ஏ.டி.கே), ஃபென்டானைல் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருட்களை கண்டறியும் சிறப்பு சோதனைக் உபகரணங்களை இந்த ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கவுள்ளது.

ஏ.ஏ.டி.கே தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோஃப் தெரிவித்ததாவது, ஃபென்டானைல், செயற்கை கன்னாபினாய்டுகள், கோகைன், “மேஜிக் மஷ்ரூம்” என அழைக்கப்படும் சைலோசிபின் போன்ற போதைப்பொருட்களை கண்டறியும் கருவிகள் ஏற்கனவே அனைத்து மாநில அலுவலகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

“முதற்கட்டமாக, போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் உண்மையில் எந்த வகை போதைப்பொருளை எடுத்துள்ளனர் என்பதை உறுதி செய்ய தரவுகள் சேகரிக்கப்படும். பின்னர், அவை சட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

புதிய தலைமுறை போதைப்பொருட்கள் தற்போது வேப் திரவ வடிவில் பரவி வருவது அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, “மேஜிக் மஷ்ரூம்” பயன்படுத்துவதாகக் கூறுபவர்களில் பலர், உண்மையில் செயற்கை கன்னாபினாய்டுகளை உட்கொண்டு வருவதாக சோதனைகள் வெளிக்கொணர்ந்துள்ளன.

மேலும், ஒரே நேரத்தில் பல்வேறு போதைப்பொருட்களை கலந்துப் பயன்படுத்தும் “பாலிட்ரக்” பழக்கம் தற்போது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும் ருஸ்லின் எச்சரித்தார்.

“சிலர் சைபு, கெட்டமைன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்களை ஒன்றாகக் கலந்து பயன்படுத்துகின்றனர். இது அடிமைத்தன்மையை மிக ஆபத்தான நிலைக்கு தள்ளுகிறது,” என்றார் அவர்.

இதுவரை ஃபென்டானைல் பயன்பாடு தொடர்பான உறுதியான வழக்குகள் ஏ.ஏ.டி.கே மீட்பு மையங்களில் பதிவாகவில்லை என்றாலும், அதன் பரவலை முன்கூட்டியே தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset