செய்திகள் மலேசியா
எருமை மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்: ஒருவருக்கு இடது விலா எலும்பு முறிந்தது
ஜொகூர்பாரு:
உலு திராம் பகுதியில் நேற்று நடைபெற்ற பலி சடங்கின்போது எருமை மாடு முட்டிய இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொருவருக்கு இடது விலா எலும்பு முறிவு ஏற்பட்டது.
காலை 10 மணிக்கு காம்பங் தெனாங்கில் நடந்த முதல் சம்பவத்தில், 45 வயதான உள்ளூர் ஆண் ஒருவர் பாதிக்கப்பட்டதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலிஸ் தலைவர், முகமது சுஹாய்மி இஷாக் தெரிவித்தார்.
எருமைக் கொம்பால் முட்டியதில் காயமடைந்த பாதிக்கப்பட்டவர், இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு இரவு 11 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இடது காலில் ஏற்பட்ட இரத்த நாள (வாஸ்குலர்) காயமே மரணத்திற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கம்போங் சுங்கை டிராம், பத்து 19இல் பிற்பகல் 2 மணிக்கு நடந்த இரண்டாவது சம்பவத்தில், திடீரென வெறிபிடித்த எருமை ஒன்று முட்டியதில் 45 வயதுடைய மற்றொரு உள்ளூர்வாசியும் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
அவர் தற்போது இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2026, 9:16 pm
11ஏ பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷனில் இடம் கிடைக்கவில்லையா?: குணராஜ் மறுப்பு
May 28, 2026, 9:16 pm
கோத்தா கினபாலுவில் மாணவி ஒருவர் கூட்டாக தாக்காப்பட்டார்
May 28, 2026, 9:13 pm
பெர்சாமா கட்சியில் நூருல் இசா இணைகிறாரா?; அது வெற்று வதந்தி: ரபிசி
May 28, 2026, 6:13 pm
7,057 பேரின் கனவுகள் சிதறின: ஏப்ரலில் வேலை இழந்த மலேசியர்களின் வேதனைக்குரல்
May 28, 2026, 4:45 pm
