நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூன் 2 விசாக தின மாற்று பொது விடுமுறை என மனிதவள அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர்:

2026 விசாக தினம், மாமன்னரின் பிறந்தநாள் ஒரே காலகட்டத்தில் வருவதால் ஏற்பட்ட குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மனிதவள அமைச்சு, ஜூன் 2 (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வ மாற்றுப் பொது விடுமுறை என உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு விசாக தினம் மே 31 ஞாயிற்றுக்கிழமை வருவதால், வழக்கமாக அதன் மாற்று விடுமுறை ஜூன் 1 திங்கட்கிழமைக்கு மாற்றப்பட வேண்டும். ஆனால் அதே நாளில் மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளும் வருவதால், விசாக தின மாற்று விடுமுறை அடுத்த வேலை நாளான ஜூன் 2-க்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

1951 பொது விடுமுறைச் சட்டம், 1955 வேலைவாய்ப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாமன்னரின் பிறந்தநாள் கட்டாய ஊதியத்துடன் கூடிய விடுமுறை என்பதால் அதை மாற்ற முடியாது என்றும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது விடுமுறை நாளில் பணிபுரிய வேண்டிய தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு நினைவூட்டியுள்ளது.

இதற்கிடையில், சரவாக்கில் விசாக தினம், மாமன்னரின் பிறந்தநாள், ஹரி காவாய் ஆகியவை ஒரே காலப்பகுதியில் வருவதால், அங்குள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு ஜூன் 3 விசாக தின மாற்று விடுமுறையாகவும், ஜூன் 4 ஹரி காவாய் மாற்று விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, விடுமுறை தொடர்பாக குழப்பமடைந்திருந்த ஆயிரக்கணக்கான மலேசியர்களுக்குத் தற்போது தெளிவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset