செய்திகள் மலேசியா
கோத்தா கினபாலுவில் மாணவி ஒருவர் கூட்டாக தாக்காப்பட்டார்
கோத்தா கினபாலு:
கடந்த வாரம் கோட்டா கினபாலுவில் நடந்த ஒரு சம்பவத்தில், 13 வயது மாணவி ஒருவர் மற்ற ஐந்து மாணவர்களால் கூட்டாக தாக்கப்பட்டதில் காயமடைந்தார்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட மாணவி தாக்கப்படும் காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
கோத்தா கினபாலுவின் தற்காலிக போலிஸ் தலைவர் சையத் லோட் சையத் அப்துல் ரஹ்மான்,
பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த மே 23, காலை 7.51 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தனது துறைக்கு புகார் அளித்ததாக கூறினார்.
மே 22 அன்று, காலை சுமார் 8 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், தாக்கப்பட்டதை தனது குடும்பத்தினரிடமோ அல்லது காவல்துறையிடமோ தெரிவிக்கக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் மிரட்டப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஐந்து மாணவிகளின் கைகளால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதனால், அவரது இரு தோள்களிலும் கால்களிலும் காயங்களும், இடது காதில் காயங்களும், இடது முழங்காலில் ஒரு சிறிய காயம் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2026, 9:16 pm
11ஏ பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷனில் இடம் கிடைக்கவில்லையா?: குணராஜ் மறுப்பு
May 28, 2026, 9:14 pm
எருமை மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்: ஒருவருக்கு இடது விலா எலும்பு முறிந்தது
May 28, 2026, 9:13 pm
பெர்சாமா கட்சியில் நூருல் இசா இணைகிறாரா?; அது வெற்று வதந்தி: ரபிசி
May 28, 2026, 6:13 pm
7,057 பேரின் கனவுகள் சிதறின: ஏப்ரலில் வேலை இழந்த மலேசியர்களின் வேதனைக்குரல்
May 28, 2026, 4:45 pm
