நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்துவை கையகப்படுத்தும் ஹம்சாவின் திட்டம்; அம்னோவுடனான ஒத்துழைப்பதற்காக மொஹைதினை நீக்கினார்: மார்ஷூக்கி

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ மொஹைதின் யாசினிடமிருந்து பெர்சத்து கட்சியைப் பிளவுபடுத்தி, அதன் மூலம் அக்கட்சியைக் கைப்பற்றுவதற்காக, பாஸ், அம்னோ கட்சிகளை மூலதனமாக்கியதாக டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொஹைதினின் முன்னாள் தனிச் செயலாளர் டத்தோ டாக்டர் மார்ஷூக்கி முகமது,

பெர்சத்து தலைவரைக் கவிழ்த்து, அதன் மூலம் தன்னை தற்காலிகத் தலைவராக நியமிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

முன்னாள் துணைத் தலைவராக இருந்த ஹம்சா, மொஹைதின் யாசினுக்கான ஆதரவு இன்னும் வலுவாக இருந்ததால், கட்சித் தேர்தலில்  தலைவர் பதவிக்குப் போட்டியிட மறுத்துவிட்டார்.

அதற்கு பதிலாக துணைத் தலைவராக நியமிக்கும் கட்சி மாற்றத் திட்டத்தில் பணியாற்றுமாறு ஹம்ஸா, மொஹைதினை சம்மதிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

தலைவர் பதவி விலகும்போது துணைத் தலைவரே தலைவராகச் செயல்பட வேண்டும் என்று பெர்சத்து சட்ட விதிகள் குறிப்பிடுவதே இதற்குக் காரணம்.

போட்டியிடாமலேயே துணைத் தலைவரானார், பின்னர் மொஹைதினை பதவி விலகுமாறு வலியுறுத்தினார்.

மொஹைதின் பதவி விலகிய பிறகு, ஹம்ஸா பெர்சத்துவின்  தற்காலிகத் தலைவரானார்.

பின்னர் பாஸ், தேசியக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், போட்டியிடும் சிரமமின்றி அவர் தேசியக் கூட்டணி தலைவராக நியமிக்கப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset