நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெராயோங் ஆற்றில் இருந்து ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர்:

ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங்கில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் நேற்று மாலை மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் முகமது ரோஸ்டி தாவூத் இதனை கூறினார்.

மாலை சுமார் 5.13 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து தனது துறைக்குத் தகவல் கிடைத்து.

உடனே ஒரு போலிஸ் குழு, தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், மருத்துவக் குழுவினர் பரிசோதனை நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

முதற்கட்ட பரிசோதனை முடிவுகளில், பாதிக்கப்பட்டவர் 30 வயதுக்குட்பட்ட ஆண் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset