செய்திகள் மலேசியா
ஈப்போ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா; சமய அறிவை ஆலய நிர்வாகங்கள் தான் கொடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
ஈப்போ -
ஆலய நிலப் பிரச்சனைகளை மாநில அமைச்சர் பார்த்துக் கொள்வார். ஆனால் சமய அறிவை ஆலய நிர்வாகங்கள் தான் கொடுக்க வேண்டும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
ஈப்போ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்வாலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மாநில அமைச்சர் டத்தோ சிவநேசன் ஆலய நிலப் பிரச்சினைகளை பற்றி பேசினார்.
மாநில அமைச்சராக இருக்கும் அவருக்கு தான் தெரியும் இதில் உள்ள பிரச்சினைகள்.
இருந்தாலும் இந்தியர் என்ற முறையில் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில் அவர் ஆலயங்களுக்கு நிலத்தை பெற்றுத் தருகிறார்.
நிலத்தை அவர் பெற்றுத் தந்தாலும் சமய அறிவை ஆலய நிர்வாகங்கள் தான் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் நம் இளைஞர்கள் மத்தியில் சமய விழிப்புணர்வு இல்லாமல் போய்விடும்.
ஆக இவ்விவகாரத்திற்கு ஆலய நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
முன்னதாக சுமார் 120 கால பழமை வாய்ந்த வரலாற்றுப் பூர்வ இந்த ஆலய கும்பாபிஷேக விழாவைக்காண ஆயிரக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஈப்போ புந்தோங் சுங்கை பாரி வழியில் எழுந்தருளியுள்ள இந்த ஆலயம் பேரா மாநிலத்தில் தாய் கோவிலாக விளங்கி வருகிறது.
இந்த ஆலயமும் குனோங் சிரோவில் உள்ள அருள் மிகு கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயமும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழாவிற்கு துணையமைச்சர் எம். குலசேகரன், பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
ஈப்போ இந்து ப தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் ஆர். சீத்தாராமன் தலைமையில் சிறப்புடன் இந்த மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த வருகையின் போது மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்கு மேலும் 30 ஆயிரம் ரிங்கிட்வழங்குவதாக டத்தோ அ. சிவநேசன் வழங்கினார் .
சுமார் 10 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த ஆலய திருப்பணிக்கு பொது மக்கள் நல்ல ஆதரவை வழங்கியுள்ளதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபா சபா செயலாளர் வெ. மு. தியாகராஜன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2026, 6:13 pm
7,057 பேரின் கனவுகள் சிதறின: ஏப்ரலில் வேலை இழந்த மலேசியர்களின் வேதனைக்குரல்
May 28, 2026, 4:45 pm
ஜூன் 2 விசாக தின மாற்று பொது விடுமுறை என மனிதவள அமைச்சு அறிவிப்பு
May 28, 2026, 2:11 pm
1எம்டிபி நிதியுடன் தொடர்புடைய ஆடம்பர அடுக்ககத்தை அமெரிக்கா பறிமுதல் செய்கிறது
May 28, 2026, 1:06 pm
