நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நபிகள் நாயகம் இப்ராஹிம், நபி இஸ்மாயில் ஆகியோரின் தியாகங்களின் வரலாற்றை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

இந்த நாட்டில் உள்ள பல்லின சமூகத்தினரிடையே ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதை உணர்வையும் வலுப்படுத்த, தியாகப் பெருநாள் கொண்டாட்டத்தை ஒரு தளமாகப் பயன்படுத்த வேண்டும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

ஐடில் அதா என்பது தியாகங்களைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல.

அது அக்கறை, ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மதிப்பு குறித்த ஒரு பெரிய செய்தியையும் கொண்டுள்ளது.

மேலும் நபிகள் நாயகம் இப்ராஹிம், நபி இஸ்மாயில் ஆகியோரின் தியாகங்க வரலாறு, இனம், மத வேறுபாடுகளைக் கடந்து, பகிர்ந்துகொள்வது, உதவுவது, ஒன்றிணைந்து நிற்பதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்குக் கற்பிக்கிறது.

இந்த நாட்டில் உள்ள பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்களுக்கு மத்தியில் தியாகப் பெருநாள் கருணை, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் ஒரு சிறந்த செய்தியைக் கொண்டு வருகிறது.

தியாகப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

மக்கள் பிரிவினைக்கு பதிலாக ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்து, சமூக வாழ்வில் மரியாதை மற்றும் அன்பின் உணர்வைத் தொடர்ந்து வளர்த்தால் மலேசியா தொடர்ந்து வலிமையாக இருக்கும்.

பின்னணி பேதமின்றி மக்கள் கைகோர்த்து ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் போது தான் மலேசியா மடானியின் உண்மையான வலிமை வெளிப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset