நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் பாலியல் முறைகேடு சம்பவங்கள் கல்வியமைச்சு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் முறைகேடு சம்பவங்கள் கல்வியமைச்சு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.


பள்ளிகள் உட்பட கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

பள்ளிகள், மாணவர்கள் அறிவைப் பெறுவதற்கும் தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.

தவிர, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சத்தையும் மன அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது.

மாணவர்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் முறைகேடு தொடர்பான ஒவ்வொரு குற்றச்சாட்டும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு ஒரு சிறிய விஷயமல்ல.

பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் மன அதிர்ச்சியின் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கக்கூடியவை.

மேலும் அவை அவர்களின் உணர்ச்சிகள், தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும்.

ஆக ஒவ்வொரு வழக்கும் சட்டத்தின்படி நியாயமான, வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும் கல்வியமைச்சும் இவ்விவகாரங்களின் துரிதமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset