செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை வென்று அர்செனல் வரலாறு படைக்கும்: மைக்கல் அர்தெதா நம்பிக்கை
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை வென்று அர்செனல் அணியினர் வரலாறு படைப்பார்கள்.
அர்செனல் அணியின் நிர்வாகி மைக்கல் அர்தெதா இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புடாபெஸ்டில் நடைபெறும் சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் அர்செனல் அணியினர் பிஎஸ்ஜி அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.
இதில் தனது அணி முதல் முறையாக சாம்பியன் லீக் கிண்ணத்தை வெல்லும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.
இந்த சீசனில் 22 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரிமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், அர்செனல் அணி மிகுந்த நம்பிக்கையுடன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
இது, இந்த முக்கியத்துவம் வாய்ந்த மோதலுக்கு முன்னதாக கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.
இருப்பினும், நடப்பு சாம்பியன்களும் ஐரோப்பிய ஜாம்பவான்களுமான பிஎஸ்ஜி எதிர்கொள்ளவிருப்பதால், அர்செனல் அணிக்கு இந்த சவால் எளிதாக இருக்காது.
பிஎஸ்ஜி அணி, பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான விருப்பமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், உள்நாட்டு வெற்றியால் கிடைத்த தன்னம்பிக்கையும் உத்வேகமும் இறுதிப் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆர்தெதா நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 8:33 am
தீனா - பியெர்லி தான் ஜோடி உலக பூப்பந்து தரவரிசையில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
June 10, 2026, 8:29 am
உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மெக்சிகோ அழுத்தத்துடன் எதிர்கொள்கிறது
June 9, 2026, 4:55 pm
உலகக்கோப்பையில் ‘பண பலம்’ காட்டும் பிரான்ஸ்: அர்ஜென்டினாவை மிஞ்சிய சந்தை மதிப்பு
June 9, 2026, 8:39 am
மெஸ்ஸி, ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ணம்
June 8, 2026, 8:47 am
ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில் உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் அணி வருகை
June 8, 2026, 8:43 am
இங்கிலாந்து அணி பயிற்சி முகாம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒன்பது பேர் காயம்
June 7, 2026, 12:06 pm
