நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தீனா - பியெர்லி தான் ஜோடி உலக பூப்பந்து தரவரிசையில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது

கோலாலம்பூர்:

நாட்டின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான எம். தீனா - பியெர்லி தான்  சமீபத்திய உலக பூப்பந்து கூட்டமைப்பின் தரவரிசையில் இரண்டு இடங்கள் சரிந்து, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

முந்தைய ஆசிய பூப்பந்து சாம்பியன் போட்டியின் போது பியெர்லிக்கு ஏற்பட்ட முதுகு காயத்தைத் தொடர்ந்து, இந்த தேசிய ஜோடி போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தது.

அதே வேளையில் ஊக்கமளிக்கும் முடிவுகளைப் பதிவு செய்யத் தவறியதாலும் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

காயம் காரணமாக பியெர்லி தான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று.

இதனால் அவர் உபர் கிண்ணம், மலேசியன் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளைத் தவறவிட்டார்.

மீண்டும் களத்திற்குத் திரும்பிய பிறகு, உலகின் முதல் இரண்டு இடங்களில் தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு தீனா-பியெர்லி தான் ஜோடியின் செயல்பாடு சீராக இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset