நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரேசிலின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக நெய்மார் நன்றாக குணமடைந்து விடுவார்: பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு

மோரிஸ்டவுன்:

பிரேசிலின் உலகக் கிண்ண பயணத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த கெண்டைக்கால் காயத்திலிருந்து நெய்மர் நன்றாக குணமடைந்து வருவதாக, அணி இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரேசிலின் வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான அவர், செவ்வாயன்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 
அதில் அவரது சிகிச்சையில் நேர்மறையான முன்னேற்றம் காணப்பட்டதால், அமெரிக்காவில் கார்லோ அன்செலோட்டியின் அணியுடன் அவர் மீண்டும் களமிறங்கக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

அவரது சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

பிரேசில் மருத்துவக் குழு திட்டமிட்டபடி, அவர் மறுவாழ்வு அட்டவணை மற்றும் உடற்பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றுவார் என்று பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset