செய்திகள் மலேசியா
அம்பாங் மன்றத்தின் அதிரடி நடவடிக்கை: வெளிநாட்டவர்களுக்காக தனி குர்பான் மையங்கள்
அம்பாங்:
தியாகத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, வெளிநாட்டவர்கள் முறையே குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்காக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (MPAJ) சிறப்பு நடவடிக்கையாக இரண்டு அதிகாரப்பூர்வ அறுப்பு மையங்களை அமைத்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று மட்டும், அந்த இரண்டு மையங்களிலும் மொத்தம் 155 மாடுகள், எருமைகள் அறுக்கப்பட்டதாக MPAJ அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், சுகாதார விதிமுறைகளை பின்பற்றி குர்பான் நடைபெறுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டான் இண்டா பகுதியில் உள்ள ஸ்ரீ மாயாங் நூருல் ஹுதா சுராவுக்கு அருகிலான திறந்த வெளி, தாமான் மெலூர் ஆகிய இரண்டு இடங்களில் இந்த பெரியளவிலான குர்பான் நடவடிக்கைகள் நடைபெற்றன.
குர்பான் நடவடிக்கைகள் சீராக நடைபெற, MPAJ சார்பில் கூடாரங்கள், மின்சார வசதி, தண்ணீர் விநியோகம், சிறப்பு கழிவுக் குழிகள், தனி நீர்த் தொட்டிகள் போன்ற முழுமையான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
“சுற்றுப்புற மக்களுக்கு எந்தவித சுகாதார பிரச்சினையோ, தொந்தரவோ ஏற்படாத வகையில் முழு கண்காணிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது,” என MPAJ தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு குர்பான் விலங்கும் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், விலங்கின் வகைக்கு ஏற்ப கட்டணமும் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது பங்கேற்பாளர்களின் பொறுப்பாகவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், MPAJ அமலாக்க அதிகாரிகளும் பலி இடமெங்கும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டதால், “அனுமதியில்லா அறுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதா?” என்ற கேள்வி சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 5:14 pm
சுங்கை நிலாம் ஆற்றில் விபரீதம்: ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
May 27, 2026, 3:41 pm
ரோஹிங்கியா சமூகத்தின் குர்பான் உள்ளூர் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது
May 27, 2026, 2:55 pm
ஹம்ஸா ஜைனுடின் அடுத்த மாதம் புதிய கட்சியை அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது
May 27, 2026, 2:53 pm
கெஅடிலான் வாய்ப்பளித்தால் பாண்டான் தொகுதியில் போட்டியிடத் தயார்: தெங்கு ஷப்ருல்
May 27, 2026, 11:57 am
