நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஹிங்கியா சமூகத்தின் குர்பான் உள்ளூர் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது

செலாயாங்: 

ஈதுல் அத்ஹா கொண்டாட்டத்தின் போது செலாயாங் பாரு சந்தைப் பகுதியில் ரோஹிங்கியா சமூகத்தினர் நடத்திய பெருமளவிலான குர்பான் நடவடிக்கை கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

மாடுகளின் இரத்தமும் கழிவுகளும் வடிகாலில் கொட்டப்பட்டதாக கூறப்படுவது, அப் பகுதி மக்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹரியான் மெட்ரோ நடத்திய ஆய்வில், சுமார் 60 மாடுகள், அதிலும் பல ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள சாடோ மாடுகள் உட்பட பல அறுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் சந்தைப் பகுதியை சூழ்ந்திருந்ததால், “இது மலேசியாவா அல்லது வேறு நாடா?” என்ற கேள்வி உள்ளூர் மக்களிடையே எழுந்துள்ளது.

கழிவுநீர் வடிகால்களில் இரத்தம், மாட்டுக் கழிவுகள் தேங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், “இந்த குர்பான் நடவடிக்கைக்கு கால்நடை சேவைகள் துறை (JPV), உள்ளூராட்சி மன்றத்தின் அனுமதி இருந்ததா?” என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சுகாதார நிலைமை மோசமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

“நேற்றிரவு முதலே அந்த பகுதி திருவிழா போல களைகட்டியது. 20,000 ரிங்கிட் மதிப்புள்ள மாடுகளும் கொண்டு வரப்பட்டிருந்தன,” என 46 வயதான அமின் அப்துல் மாலேக் தெரிவித்தார். இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவு (PKP) காலத்திற்கு முன்பு இதைவிட பெரிய அளவில் குர்பான் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இது 10 ஆண்டுகளாக நடைபெறும் விஷயம் தான். ஆனால் அதிகாரப்பூர்வ அனுமதி இருக்கிறதா என்பதே மக்களின் கேள்வி,” என மற்றொரு குடியிருப்பாளர் டின் தெரிவித்துள்ளார். சில மாடுகள், ஆடுகள் கடை வளாகங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஷாம் என்ற நபர், சுமார் 60 மாடுகள் அப்பகுதியில் அறுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார். “வடிகாலில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று எச்சரித்தோம். ஆனால் மக்கள் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை,” என அவர் விளக்கம் அளித்தார்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், “குர்பான் பெயரில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுகிறதா?” என்ற கேள்வி தற்போது தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset