நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாகவே கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்: டான்ஶ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

வரும் விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாகவே கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா நடைபெறும்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.


கோலாலம்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமான ராஜகோபுர பாலஸ்தாபன விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை விமான ராஜகோபுர பாலஸ்தாபன நிகழ்வு பக்தி உணர்வுடன் நடைபெற்றது.

இதற்கு முன் காலை 8.00 மணி முதல் பல்வேறு பூஜைகள், யாகங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த முக்கிய நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கணேசரின் அருளாசியை பெற்றனர்.

ஆலயத்தின் ஆன்மிக வளர்ச்சியில் இந்த பாலஸ்தாபன விழா ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

மேலும் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாகவே நடைபெறவுள்ளது.

இதனால் ஆலயத் திருப்பணி, புதுப்பிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆக வரவிருக்கும் கும்பாபிஷேக நிகழ்விலும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset