செய்திகள் மலேசியா
கெஅடிலான் வாய்ப்பளித்தால் பாண்டான் தொகுதியில் போட்டியிடத் தயார்: தெங்கு ஷப்ருல்
கோலாலம்பூர்:
பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் பணியாற்றி வருவதாகவும், கட்சியின் நம்பிக்கை கிடைத்தால் அத்தொகுதியில் போட்டியிடத் தயார் என்றும் தெங்கு ஷப்ருல் அஜீஸ் கூறினார்.
பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் அவர், கெஅடிலான் வாய்ப்பளித்தால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அப்பகுதியில் முன்னாள் கெஅடிலான் துணைத் தலைவர் ரபிஸி ரம்லியை எதிர்ப்பதை விட, அப்பகுதி மக்களுக்குச் சேவை செய்வதிலேயே தனது கவனம் இப்போது உள்ளது.
பாண்டன் நாடாளுமன்றத்தில் ரபிஸிக்கு எதிராகப் போட்டியிடும் சாத்தியக்கூறு பற்றி நான் அதைப் பற்றிச் சற்றும் சிந்திக்கவில்லை.
ஆம், அவர் இந்த நாடாளுமன்றத்தில் மீண்டும் போட்டியிட்டால், நான் ஒரு அரசியல் ஜாம்பவானை எதிர்கொள்ள நேரிடலாம்.
இருப்பினும், பாண்டன், அம்பாங் அல்லத்ய் ஒதுக்கப்படும் பிற பகுதிகள் என எங்கு இருந்தாலும், பணியாற்றுவதும் சேவை செய்வதும்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 6:26 pm
அம்பாங் மன்றத்தின் அதிரடி நடவடிக்கை: வெளிநாட்டவர்களுக்காக தனி குர்பான் மையங்கள்
May 27, 2026, 5:14 pm
சுங்கை நிலாம் ஆற்றில் விபரீதம்: ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
May 27, 2026, 3:41 pm
ரோஹிங்கியா சமூகத்தின் குர்பான் உள்ளூர் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது
May 27, 2026, 2:55 pm
ஹம்ஸா ஜைனுடின் அடுத்த மாதம் புதிய கட்சியை அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது
May 27, 2026, 11:57 am
