செய்திகள் மலேசியா
பெட்டாலிங் ஜெயாவில் புதிய மருத்துவமனைக்காக தாமான் மேடான் விளையாட்டு வளாகத்தை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது
புத்ராஜெயா:
பெட்டாலிங் ஜெயாவில் புதிய மருத்துவமனைக்காக தாமான் மேடான் விளையாட்டு வளாகத்தை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
சுகாதாரா அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.
தாமான் மேடானில் உள்ள ஆறு ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த இடம், தற்போது ஒரு நவீன விளையாட்டு வளாகத்தைக் கொண்டுள்ளது.
இது, பெட்டாலிங் ஜெயா, சுபாங், பூச்சோங் வழித்தடத்தில் உள்ள அதிக மக்கள் அடர்த்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு பொது மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவசரத் தேவையைத் தீர்க்கும் திறன் கொண்டது.
சுகாதார அமைச்சிற்கு சிலாங்கூர் மாநில அரசுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற தொழில்நுட்பக் கூட்டத்தில், எக்ஸ் பார்க் பிஜே சவுத் எனப்படும் வளாகம் புதிய மருத்துவ வசதிக்கான சாத்தியமான இடமாக அடையாளம் காணப்பட்டது.
சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு (பி40) மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு அந்த 15 ஏக்கர் நிலம் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 11:57 am
தைப்பிங் சிறைக் கலவரம் குறித்த சுஹாகாம் அறிக்கையை அரசு பரிசீலிக்கும்: ஃபஹ்மி
May 27, 2026, 10:03 am
அன்வர், புத்ரா பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்
May 27, 2026, 10:00 am
பெட்டாலிங்ஜெயாவில் மருத்துவமனைக்கு நிலம் இல்லையா; தரவு மையம் கட்ட முடியுமா?: சார்லஸ் கேள்வி
May 27, 2026, 9:59 am
பொருத்தமான நேரத்தில் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வேன்: பிரதமர்
May 27, 2026, 9:58 am
பொதுத் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க அன்வார் ஜாஹித்தை சந்திக்கவில்லை
May 27, 2026, 9:57 am
