செய்திகள் மலேசியா
சுங்கை நிலாம் ஆற்றில் விபரீதம்: ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
ஷா ஆலம்:
இன்று உலு சிலாங்கூர், சுங்கை நிலாம், சுங்கை செலிசேக்கில் நிகழ்ந்த சம்பவத்தில், ஒரு 10 வயது சிறுவன், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் சிலாங்கூர் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், மதியம் 1.40 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த அழைப்பைத் தாம் பெற்றதாகத் தெரிவித்தார்.
கோலா குபு பாரு தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு தீயணைப்பு வாகனத்துடன், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
"சம்பவ இடத்தை வந்தடைந்ததும், பாதிக்கப்பட்டவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியதாக நம்பப்படுவதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
"தற்போது, தேடுதல் மீட்பு பணிகள் அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 6:26 pm
அம்பாங் மன்றத்தின் அதிரடி நடவடிக்கை: வெளிநாட்டவர்களுக்காக தனி குர்பான் மையங்கள்
May 27, 2026, 3:41 pm
ரோஹிங்கியா சமூகத்தின் குர்பான் உள்ளூர் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது
May 27, 2026, 2:55 pm
ஹம்ஸா ஜைனுடின் அடுத்த மாதம் புதிய கட்சியை அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது
May 27, 2026, 2:53 pm
கெஅடிலான் வாய்ப்பளித்தால் பாண்டான் தொகுதியில் போட்டியிடத் தயார்: தெங்கு ஷப்ருல்
May 27, 2026, 11:57 am
