நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைக்க சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைக்க சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுவதற்காக முன்மொழியப்பட்ட இடத்திற்கு சுகாதார அமைச்சு  ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய, மாநில, ஊராடை அமைப்புகள் பங்கேற்ற, மே 14 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக அமிரூடின் கூறினார்.

சுகாதார அமைச்சால் பெட்டாலிங் ஜெயா மருத்துவமனை கட்டப்படுவதால், பெட்டாலிங் மாவட்ட மக்கள், குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, புச்சோங் ஆகிய பகுதி மக்கள் பயனடையும் வகையில், நில ஒப்பந்த செயல்முறையை எளிதாக்கவும் விரைவுபடுத்தவும் சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset