செய்திகள் மலேசியா
ஹம்ஸா ஜைனுடின் அடுத்த மாதம் புதிய கட்சியை அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது
கோலாலம்பூர்:
பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடினுக்கு நெருக்கமான ஒரு வட்டாரத்தின்படி, அவர் தலைமையிலான ஒரு புதிய அரசியல் கட்சி அடுத்த மாதத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அந்த வட்டாரம், கோலாலம்பூரில் கட்சியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது கிட்டத்தட்ட முடிந்து
விட்டன என்று கூறியது.
அடுத்த மாதம் ஹம்ஸா புதிய கட்சியை அறிவிப்பார்.
அதில் பெர்சத்துவின் அடிமட்டத் தொண்டர்களில் பெரும் பகுதியினர் ஹம்ஸாவுடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில்.ஜூன் 22 அன்று மக்களவை அமர்வுக்கு முன்னதாக நடைபெறும் ரீசெட் மாநாட்டில் புதிய கட்சியின் தொடக்க விழா நடைபெறும்.
பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுடனான தலைமைத்துவ அதிகாரப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, பிப்ரவரி 13 அன்று ஹம்சா பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 6:26 pm
அம்பாங் மன்றத்தின் அதிரடி நடவடிக்கை: வெளிநாட்டவர்களுக்காக தனி குர்பான் மையங்கள்
May 27, 2026, 5:14 pm
சுங்கை நிலாம் ஆற்றில் விபரீதம்: ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
May 27, 2026, 3:41 pm
ரோஹிங்கியா சமூகத்தின் குர்பான் உள்ளூர் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது
May 27, 2026, 2:53 pm
கெஅடிலான் வாய்ப்பளித்தால் பாண்டான் தொகுதியில் போட்டியிடத் தயார்: தெங்கு ஷப்ருல்
May 27, 2026, 11:57 am
