செய்திகள் மலேசியா
தைப்பிங் சிறைக் கலவரம் குறித்த சுஹாகாம் அறிக்கையை அரசு பரிசீலிக்கும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
தைப்பிங் சிறைக் கலவரம் குறித்த சுஹாகாம் அறிக்கையை அரசு பரிசீலிக்கும்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
தைப்பிங் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த கலவரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நடத்திய பொது விசாரணையின் முடிவுகளை, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு அரசாங்கம் ஆய்வு செய்யும்.
இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.
ஆனால் சுஹாகாமின் கண்டுபிடிப்புகளை புத்ராஜெயா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.
வழக்கமாக, சுஹாகாமின் ஆண்டு அறிக்கை விவாதத்திற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், நாங்கள் அதை ஆய்வு செய்வோம்.
சுஹாகாமின் கண்டுபிடிப்புகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.
எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு இந்த விஷயத்தை நாங்கள் ஆராய்வோம், என்று லெம்பா பந்தாய் தியாகப் பெருநாள் விழாவிற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 10:03 am
அன்வர், புத்ரா பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்
May 27, 2026, 10:00 am
பெட்டாலிங்ஜெயாவில் மருத்துவமனைக்கு நிலம் இல்லையா; தரவு மையம் கட்ட முடியுமா?: சார்லஸ் கேள்வி
May 27, 2026, 9:59 am
பொருத்தமான நேரத்தில் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வேன்: பிரதமர்
May 27, 2026, 9:58 am
பொதுத் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க அன்வார் ஜாஹித்தை சந்திக்கவில்லை
May 27, 2026, 9:57 am
