செய்திகள் மலேசியா
பொருத்தமான நேரத்தில் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வேன்: பிரதமர்
கோலாலம்பூர்:
ஈரானிய அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடியபோது, பொருத்தமான நேரத்தில் டெஹ்ரானுக்குப் பயணம் செய்வதற்கான பயணத் திட்டத்தை ஏற்பாடு செய்வதாக பிரதமர் டத்தர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த உரையாடலின்போது, சமீபத்தில் ஹோர்முஸ் நீரினையில் மலேசியக் கப்பல்களை விடுவிக்க உதவியதில் ஈரான் அளித்த ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் தனது பாராட்டைத் தெரிவித்ததாகவும், ஈரான் விரைவில் அமைதிக்குத் திரும்பும் என்று நம்புவதாகவும் அன்வார் கூறினார்.
மேலும், ஆளில்லா விமானத் தாக்குதல்கள், இஸ்ரேல்-அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தவொரு ஆக்கிரமிப்பு, தாக்குதல் நடவடிக்கைகளையும் மலேசியா உறுதியாகக் கண்டிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக அரங்கில் அமைதி, நீதி மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் மலேசியாவின் நிலையான நிலைப்பாட்டிற்கு பெஷேஷ்கியன் பாராட்டு தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்காக டெஹ்ரானுக்கு வருகை தருமாறு பெஷேஷ்கியன் என்னை அழைத்தார்.
ஆக பொருத்தமான நேரத்தில் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 11:57 am
தைப்பிங் சிறைக் கலவரம் குறித்த சுஹாகாம் அறிக்கையை அரசு பரிசீலிக்கும்: ஃபஹ்மி
May 27, 2026, 10:00 am
பெட்டாலிங்ஜெயாவில் மருத்துவமனைக்கு நிலம் இல்லையா; தரவு மையம் கட்ட முடியுமா?: சார்லஸ் கேள்வி
May 27, 2026, 9:58 am
பொதுத் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க அன்வார் ஜாஹித்தை சந்திக்கவில்லை
May 27, 2026, 9:57 am
வேலை இழப்புகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும்: பிரதமர்
May 26, 2026, 4:40 pm
