செய்திகள் மலேசியா
பொதுத் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க அன்வார் ஜாஹித்தை சந்திக்கவில்லை
கோலாலம்பூர்:
வரவிருக்கும் தேர்தல்களில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக, தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியை தாம் சந்திக்கவில்லை.
பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதிப்படுத்தினார்.
வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்பான விவாதங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது அவர், சுருக்கமாக, இன்னும் இல்லை, இன்னும் இல்லை, என்று பதிலளித்தார்.
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி தனித்தனியாகப் போட்டியிடும் நிலைப்பாடு குறித்து ஜாஹித்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அன்வார் முன்னதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரின் நலனுக்காகவும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 11:57 am
தைப்பிங் சிறைக் கலவரம் குறித்த சுஹாகாம் அறிக்கையை அரசு பரிசீலிக்கும்: ஃபஹ்மி
May 27, 2026, 10:00 am
பெட்டாலிங்ஜெயாவில் மருத்துவமனைக்கு நிலம் இல்லையா; தரவு மையம் கட்ட முடியுமா?: சார்லஸ் கேள்வி
May 27, 2026, 9:59 am
பொருத்தமான நேரத்தில் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வேன்: பிரதமர்
May 27, 2026, 9:57 am
வேலை இழப்புகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும்: பிரதமர்
May 26, 2026, 4:40 pm
