செய்திகள் மலேசியா
பெட்டாலிங்ஜெயாவில் மருத்துவமனைக்கு நிலம் இல்லையா; தரவு மையம் கட்ட முடியுமா?: சார்லஸ் கேள்வி
கோலாலம்பூர்:
பெட்டாலிங்ஜெயா சுற்று வட்டாரத்தில் மருத்துவமனைக்கு நிலம் இல்லையா. ஆனால் தரவு மையம் கட்ட முடியுமா? என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.
பெட்டாலிங் ஜெயா, சுபாங், பூசோங் வழித்தடத்திற்கு ஏற்றவாறு ஒரு பொது மருத்துவமனையைக் கட்டுவதற்கான திட்டங்களுக்கு, பொருத்தமான நிலத்தை அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் ஒரு தடையாக உள்ளது.
சிறப்புப் பொது மருத்துவமனைகள் இல்லாததால், அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் நெரிசல், தாமதமான சந்திப்பு முன்பதிவுகள், சிகிச்சை பெற மேற்கொள்ளும் நீண்ட நேர காத்திருப்பு போன்ற பிரச்சனைகளைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
நாட்டிலேயே அதிக மக்கள் தொகை அடர்த்தியும் செல்வமும் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், சிலாங்கூரில் தற்போது 13 அரசு மருத்துவமனைகள் உள்ளன.
ஆனால் அவற்றில் எதுவும் குறிப்பாக அந்த மூன்று பகுதிகளுக்கும் சேவை செய்வதில்லை.
அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போதும், முன்பதிவுகள் தாமதமாகும்போதும், அல்லது அவசர நிலைகள் ஏற்படும்போதும், பலர் அப்பகுதிக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லவோ அல்லது அதிக செலவுள்ள தனியார் சிகிச்சையை நாடவோ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் மாநிலம் முழுவதும் 4,821 ஏக்கர் (1,951 ஹெக்டேர்) நில இருப்பைக் கொண்டிருக்கிறது.
அதில் பெட்டாலிங் மாவட்டத்தில் மட்டும் 240.94 ஏக்கர் (97.5 ஹெக்டேர்) நிலம் அடங்கும் என்றும் சிலாங்கூர் மாநில சட்டமன்றம் அளித்த பதிலையும் சார்லஸ் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு மருத்துவமனைக்கு பொருத்தமான நிலம் என்பது எதைக் குறிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நிலையான நீர், மின்சார வசதி, வெள்ள அபாயம் இல்லாத நிலை, வலுவான உள்கட்டமைப்பு, எளிதில் அணுகக்கூடிய தன்மை மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்கான இடம் போன்ற தேவைகளை அவர் பட்டியலிட்டார்.
தரவு மைய மேம்பாட்டிற்கான தேவைகளைப் போலவே இந்த அளவுகோல்களும் பொதுவாக ஒத்துப்போகிறது.
சிலாங்கூரில் தற்போது 39 தரவு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 13 கட்டுமானத்தில் உள்ளன.
இது தவிர, மாநிலத்தில் ஏற்கனவே 100 ஏக்கருக்கும் (40.5 ஹெக்டேர்) அதிகமான பரப்பளவைக் கொண்ட பல பெரிய அளவிலான வளாகங்களும் உள்ளன.
இதை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு பெரிய நகரத்தின் அரசு மருத்துவமனைக்கு 15 முதல் 40 ஏக்கர் (6 முதல் 16 ஹெக்டேர்) மட்டுமே தேவைப்படலாம்.
இங்குள்ள பிரச்சினை 'பொருத்தமான நிலம்' என்பதா அல்லது மாநிலத்தின் முன்னுரிமைகளா என்பதே என்று அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 11:57 am
தைப்பிங் சிறைக் கலவரம் குறித்த சுஹாகாம் அறிக்கையை அரசு பரிசீலிக்கும்: ஃபஹ்மி
May 27, 2026, 9:59 am
பொருத்தமான நேரத்தில் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வேன்: பிரதமர்
May 27, 2026, 9:58 am
பொதுத் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க அன்வார் ஜாஹித்தை சந்திக்கவில்லை
May 27, 2026, 9:57 am
வேலை இழப்புகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும்: பிரதமர்
May 26, 2026, 4:40 pm
