நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டெய்க்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த குற்றச்சாட்டுகள்; அஸாம் பாக்கி விசாரணைக்கு அழைக்கப்படுவார்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

டெய்க்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு உதவ முன்னாள் எம்ஏசிசி ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியை போலிஸ் அழைக்க உள்ளது.

புக்கிட் அமாட் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்க்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, டான்ஸ்ரீ அஸாம் பாக்கியை விரைவில் வரவழைக்கவுள்ளார்.

மே 13 அன்று டெய் அளித்த காவல்துறை புகாரைத் தொடர்ந்து, தண்டனைச் சட்டத்தின் 506ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

இதுவரை இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் டெய், அச்சுறுத்தல்களை விடுத்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கறிஞர் ஆவர்.

போலிசில் புகார் அளிக்கப்பட்ட பிறகு, டெய் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அந்தச் செய்தியாளர் சந்திப்பில், ஒரு வழக்கறிஞர் மூலம் தனக்கு மிரட்டல் வந்ததாக அவர் அறிவித்தார்.

நாங்கள் டெய்யின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, அந்த வழக்கறிஞரை அடையாளம் கண்ட பிறகு, நேற்று அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்தோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset