நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியாகப் பொருளை கொண்டாட வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் இன்ஸ்பெக்டரும், மனைவியும் மரணம்; 4 குழந்தைகள் காயம்

பெக்கான்:

தியாகப் பொருளை கொண்டாட வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் இன்ஸ்பெக்டரும், மனைவியும் மரணமடைந்த வேளையில் 4 குழந்தைகள் காயமடைந்தனர்.

பெக்கான் மாவட்ட போலிஸ் தலைவர்,  முகமது ஜைடி மாட் ஜின் இதனை கூறினார்.

இங்குள்ள ஜாலான் குவாந்தான் - சிகாமட், கிலோமீட்டர் 76-ல் இன்று அதிகாலை இரண்டு கார்கள் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில்  இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள ஒரு போலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.

தியாகப் பொருளை கொண்டாடுவதற்காக, தம்பதியினரும் அவர்களது 4 குழந்தைகளும் நெகிரி செம்பிலானில் உள்ள தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிய வருகிறது.

அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரின் நான்கு குழந்தைகளுக்கும், சம்பந்தப்பட்ட மற்றொரு காரின் ஓட்டுநர் பயணிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினார்.

இறந்தவர்கள், குவாந்தான் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் (பணியில் இருந்த 50 வயதான ஆய்வாளர் ஷா லோக்மான் லுட்சா ராம்லி, அவரது மனைவி, 46 வயதான நூருல்ஃபிசா அர்டியானா என அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset