நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலை இழப்புகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நாட்டில் வேலை இழப்புகளைச் சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் வரை 7,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவிக்கும்.

அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ள இந்த நடவடிக்கைகளில், மாற்று வேலை வாய்ப்புகளை வழங்குவதும் அடங்கும்.

இந்தப் பிரச்சினையை நாங்கள் தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழுவின் கூட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஓரிரு வாரங்களுக்குள், வேலைகளை மேம்படுத்தவும் மாற்று வேலைகளை வழங்கவும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று  பிரதமர் கூறினார்.


முன்னதாக மார்ச் மாதத்தில் 5,855 ஆக இருந்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில் 21% அதிகரித்து 7,057 ஆக உயர்ந்துள்ளதாக மலேசியாவில் நேற்று பொருளாதார அமைச்சர் அக்மல் நசீர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset