செய்திகள் உலகம்
“ருசிபேதம்” நூலின் முன்வெளியீட்டு சிறப்புப் பிரதியை ராயல் கிங்ஸ் குழுமத் தலைவர் சிராஜுதீனிடம் வழங்கிய நூலாசிரியர் ஷாநவாஸ்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளரும் இலக்கிய ஆளுமையுமான ஷாநவாஸ் அவர்கள், தனது புதிய நூலான “ருசிபேதம்” நூலின் முன்வெளியீட்டு பிரதியை ராயல் கிங்ஸ் குரூப் அலுவலகத்தில் அதன் நிறுவனரும் தலைவருமான சிராஜுதீனிடம் வழங்கிய நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சமூக ஆர்வலரும் ராயல் கிங்ஸ் குரூப் நிறுவன தலைவர் சிராஜுதீன் அவர்கள், நூலின் சிறப்பு பிரதியை பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பு இலக்கியம், தமிழ் மொழி வளர்ச்சி, சமூக மாற்றங்கள், சிங்கப்பூரின் பல்துறை கலாசார வாழ்க்கை குறித்து அர்த்தமுள்ள உரையாடல்களால் சிறப்புப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான குரலாக திகழும் ஷாநவாஸ் அவர்கள், சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து மற்றும் சமூக விமர்சனங்களின் மூலம் வாசகர்களிடையே தனி இடத்தைப் பெற்றுள்ளார். குறிப்பாக சிங்கப்பூரின் நகர்ப்புற வாழ்க்கை, பல இன மக்களின் உணவு மரபுகள், குடியேற்ற சமூகங்களின் அனுபவங்கள் மற்றும் மனித உறவுகளின் நுணுக்கங்களை தனது எழுத்துகளில் ஆழமாக பதிவு செய்து வருபவர் என இலக்கிய உலகில் பாராட்டப்படுகிறார்.

அவரது படைப்புகள் பல்வேறு இலக்கிய விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, தகுதிப் பரிசு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருது, மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசு உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களை பெற்றுள்ளார். மேலும், அவரது “அயல்பசி” தொடர் கட்டுரைகள் பண்பாட்டு, சமூக பார்வையில் சிறந்த படைப்பாக பரவலாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய நூலான “ருசிபேதம்” உணவை வெறும் அனுபவமாக மட்டும் பார்க்காமல், அதன் பின்னணியில் உள்ள வரலாறு, அரசியல், கலாசாரம், மொழி, மதம், சந்தை அமைப்புகள், குடியேற்ற வாழ்க்கை மற்றும் மனித உணர்வுகளை இணைத்து சிந்திக்க வைக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த நூல் தமிழ் வாசகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வின்போது ஷாநவாஸ் அவர்கள் தனது எழுத்து பயணம், சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, புதிய தலைமுறை வாசகர்களின் பங்கு மற்றும் சமூக மாற்றங்களில் இலக்கியத்தின் தாக்கம் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வின் நிறைவில், ஷாநவாஸ் அவர்களுக்கு ராயல் கிங்ஸ் குரூப் சார்பில் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டதுடன், அவரது புதிய நூல் மிகுந்த வரவேற்பைப் பெற வாழ்த்துகளும் கூறப்பட்டன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
